உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான 39-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் நாணயசுழட்சியில் வென்ற மேற்கிந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர்.
இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். இதில் கருணாரத்ன 32 ஓட்டங்களில் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த குசல் பெரேரா 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கைக்கோர்த்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் மென்டிஸ் அணியின் ஓட்டத்தை மேலும் உயர்த்தினர். இதில் குசல் மென்டிஸ் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மெத்யூஸ் 26 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து பொறுப்பாக ஆடி தனது சதத்தினை பதிவு செய்து அசத்திய அவிஷ்க பெர்னாண்டோ, 103 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இசுரு உதான 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 338 ஓட்டங்களை எடுத்துள்ளது. தனஞ்ஜெய டி சில்வா 6 ஓட்டங்களுடனும் ,
திரிமன்னே 45 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
மேற்கிந்திய அணியில் ஜசன் ஹோல்டர் 2 விக்கட்டுகளும், பாபியன் ஆலென், காட்ரெல் , ஒஷானே தோமஸ் ஆகியோர் தலா 1 விக்கட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 339 ஓட்ட இலக்குடன் மேற்கிந்திய அணி களமிறங்கியுள்ளது.
கருத்து தெரிவிக்க