மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடமிருந்து ஒரு பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
3வார காலத்தினுள் நஷ்டஈட்டு தொகையை வழங்காவிட்டால் அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாகவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
மருத்துவர் சங்கம் தெரிவித்த சில கருத்துகள் ஊடகங்களில் வெளியானதால் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மருந்து இறக்குமதியின் போது 20பில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகவும் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதாகவும் ‘சுவபத் கிருள’ நிகழ்ச்சிக்கு அரச நிதியை வீணாக்கியமை உட்பட பல குற்றச்சாட்டுகளை மருத்துவர் சங்கம் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் பொய்ப்பிரசாரங்கள் வெளியிட வேண்டாம் எனவும் நஷ்ட ஈட்டு தொகையை வழங்காவிட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க