தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று ஆரம்பமாகின்றது .
இவ் விபத்து வாரம் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் இடம்பெறவிருக்கின்றது.
இதன் கீழான திட்டங்கள் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் லக்மால் கம்லத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 1 மில்லியன் பேர் விபத்தினால் வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
15 தொடக்கம் 44 வயதுக்கு இடைப்பட்டவர்களின் உயிரிழப்புக்கு காரணம் திடீர் விபத்துக்களே ஆகும் இதற்கு முக்கிய காரணம் கவலை குறைவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்கள் இந்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜீலை 1 வீதி விபத்துக்களை தடுக்கும் தினம்
ஜீலை 2 வேலைத்தினங்களை தடுக்கும் தினம்
ஜீலை 3 வீடு மற்றும் முதியோர் வீடுகளில் இடம்பெறும் விபத்துக்களை தடுக்கும் தினம்
ஜீலை 4 ஆரம்ப பாடசாலைகளில் விபத்துக்களை தடுக்கும் தினம்
ஜீலை 5 பாடசாலைகளில் விபத்துக்களை தடுக்கும் தினம்
குறித்த திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பணிப்பாளர் நாயகம் மேலும் கூறியுள்ளது.
கருத்து தெரிவிக்க