வட கொரியாவுக்கு விஜயம் செய்த முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப், வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
வட மற்றும் தென் கொரிய எல்லையின் ஊடாக ட்ரம்ப் நாட்டுக்குள் பிரவேசித்தார். வடகொரிய தலைவர் கிம்முடன் சுமார் ஒரு மணித்தியால சந்திப்பு இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் கிடைத்துள்ளன.
வட மற்றும் தென் கொரிய எல்லையில் இராணுவம் அகற்றப்பட்ட பகுதியில், இந்த சந்திப்பு இடம்பெற்றது. அணு ஆயுத நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளுக்காக இரு தரப்பினரையும் இணைத்து , குழு ஒன்றை அமைக்க இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க