போதையிலிருந்து விடுதலையான தேசம் எனும் நிகழ்ச்சித்திட்டம் இவ்வாரம் பரவலாக நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலின் கீழ் இந்நிகழ்ச்சிதிட்டம் பல்வேறு கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய இன்று கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கணேஸ்வரனின் பங்குபற்றலுடன் உளநலப்பிரிவு வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ் இர்சாத் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்திட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்
கல்முனை நற்பிட்டிமுனை கிட்டங்கி பிரதான வீதியில் விழிப்புணர்வு செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது வீதியில் பயணம் செய்த வாகன சாரதிகள் இடைநிறுத்தப்பட்டு வீதி ஒழுங்கு முறைகள் சாரத்திய ஒழுங்கு விதிகள் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் குறித்து தெளிவூட்டப்பட்டது.
மேற்குறித்த வாகன சாரதிகளுக்கு போதைப்பொருள் தொடர்பான அறிவுறுத்தல் தலைக்கவசம் அணிதலின் ஒழுங்கு விதிகள், தொலைபேசி உரையாடலில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பிலான அறிவுரைகள் யாவும் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இச்செயற்றிட்டமானது கடந்த ஒரு வாரகாலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் பிரதானமாக போதைப்பொருள் பாவனை மற்றும் விபத்துக்களை தடுக்கும் முகமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட சகல விதமான உதவிகளையும் உளநலம் சார்ந்த விடயங்களையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட தேவையான உளவள ஆலோசனைகளையும் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் உளநலப்பிரிவு வழங்குவதாக தெரிவித்துள்ளது
கருத்து தெரிவிக்க