உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கைதடி சித்தமருத்துவ மனையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்ல

சாவகச்சோி- கைதடி சித்தமருத்துவ மனையில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத நிலையில் சுகாதார சீா்கேட்டுடன் குறித்த வைத்தியசாலை இயங்கிக் கொண்டிருப்பதாக பொபதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை நிா்வாகமும், அதிகாாிகளும் கவனயீனமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.

குறித்த வைத்தியசாலையில் மலசல கூடம், நோயாளா்களுக்கான கட்டில்கள் மற்றும் கழிவு நீா் வெளியேற்றும் பகுதிகள் மிக சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதாக நோயாளா்கள் கூறுகின்றனர்.

வைத்தியசாலையில் ஊழியா்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் நோயாளா்கள் கூறியுள்ளனர்.

குறித்த வைத்தியசாலை தொடங்கப்பட்டபோது அமைக்கப்பட்ட மலசல கூடம்தான் இப்போதும் ஒருவிதமான புனரமைப்பும் செய்யப்படாமல் காணப்படுகின்றது என தங்கி சிகிச்சை பெற்று வெளியேறிய நோயாளி ஒருவா் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் சிறந்த சித்த மருத்துவத்தை வழங்கும் ஒரு அரச வைத்தியசாலை கேட்பாரற்று விடப்பட்டிருப்பதை குறித்து வைத்தியசாலைக்கு செல்லும் எவரும் அவதானிக்கலாம்.

குறித்த வைத்தியசாலையில் சில நாட்கள் தங்கியிருந்து மருத்துவம் பெற்றேன். நான் வெளிநாட்டிலிருந்து இந்த மருத்துவத்தை பெறுவதற்காக வந்தேன்.

வைத்தியசாலையில் ஒரே ஒரு ஆசன கழிப்பறைதான் இருக்கின்றது. அத்தோடு அங்கிருக்கும் மலசல கூடங்களுக்கு கதவுகள் கூட ஒழுங்காக இல்லை என மேலும் குறித்த நோயாளி தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு சாவகச்சேரி பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க