இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் அரசியல் தீர்வு திட்டம் உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்தக் கட்சியில் 16 ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, அரசியல் தீர்வு, ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு, மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலையும் பயங்கரவாத தடைச்சட்டமும் போன்றன நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், வேலைவாய்ப்பு, போராளிகள் ஜனநாயகத்தில் இணைப்பு, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், தெங்குபனம் பொருள் அபிவிருத்தி, மீன்பிடித்துறை, கல்வி, வங்கிக் கடன் இரத்து உட்பட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்து தெரிவிக்க