இரண்டு மாத காலப்பகுதிக்குள் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிரிய வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் போட்டிப் பரீட்சை கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களிலுள்ள 13 மத்திய நிலையங்களில் நேற்று நடைபெற்றது.
மேல் மாகாண அரச சேவை ஆணைக்குழு மற்றும் மேல்மாகாண கல்வித் திணைக்களம் இணைந்து இந்தப் போட்டிப் பரீட்சையை நடத்த்தியதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மாத காலப்பகுதிக்குள் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் படிப்படியாக பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பூர்த்தி செய்யப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க