இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் யோசனைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகிவருகின்றது.
இதற்கான பிரேரணையை தயாரிக்கும் பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகியுள்ளன என்று சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
அத்துடன், இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
மரண தண்டனையானது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கு முரணான செயல் என அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க