உயிருக்கு தீங்கு விளைவிப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்பதால், மரண தண்டனையை ஆதரிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இன்று (30) மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி போலவே பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தாமரை அணி, ஜே. வி. பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன மரண தண்டனைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
முதலில் இந்த விவகாரத்தை அமைச்சரவை அமைச்சர்களுடனும் பின்னர் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருடனும் விவாதிக்க எதிர்பார்க்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு கனடா, இங்கிலாந்து, ஜேர்மன் உள்ளிட்ட முக்கிய நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க