தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் மாநாடு நடைபெறும் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்திவருகின்றனா்.
காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என வலியுறுத்தி இந்த கவனயீா்ப்பு போராட்டம் உறவினா்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் மாநாட்டு மண்டபத்திற்குள் நுழையாத வண்ணம் நுழைவாயில்களில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதுடன், விசேட அதிரடிப்படையினரும் அங்கு காணப்படுகின்றனா்.
கருத்து தெரிவிக்க