உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான மற்றும் காயமடைந்தோருக்கு 238 மில்லியன் ரூபாய் இழப்பீடு

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களினால் பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்கு இதுவரையில் 238மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோரை இழந்த 33 பிள்ளைகளை பராமரிக்க 100 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்தவர்களுக்கு வைத்திய அறிக்கைகளின் பிரகாரம் மேலும் இழப்பீடுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தற்கொலைத் தாக்குதலிகளினால் முற்றாக சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு நேற்று(29) காலை பிரதமர் ரணில் விக்ரசிங்க விஜயம் மேற்கொண்டிருந்த போதே இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்

காயமடைந்தவர்களுக்கு வைத்திய அறிக்கைகளின் பிரகாரம் மேலும் இழப்பீடுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மரணமான 189 பேருக்கு 185 மில்லின் ரூபாயும் காயமடைந்த 403 பேருக்கு 53 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையும்; இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர்-எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு முன்னர் சீயோன் தேவாலயம் முழுமையாக புனரமைக்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இவ்விஜயத்தில் ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.சசிகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க