உள்நாட்டு செய்திகள்புதியவை

சிறுநீரக நோயாளிகளுக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கும் திட்டம்

சிறுநீரக நோயாளிகளுக்கான’டயாலிசிஸ் சிகிச்சையை எதிர்வரும் மாதம் முதல் வீட்டில் இருந்தும் பெற்றுக்கொள்ளும் ‘ முறையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

ரூ .500 மில்லியன் செலவில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜிதா சேனாரட்ன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தலா ரூ. 103,000 என்ற சராசரி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த முறையின்படி, டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒரு சிறப்பு ஹோட்லைன் உருவாக்கப்படும்.

தேவைப்படும் போது நோயாளியின் இல்லத்தில் டயாலிசிஸ் இயந்திரம் நிறுவப்படும். சிகிச்சையின் முன்னேற்றத்தை அருகிலுள்ள அரச வைத்தியசாலை கண்காணிக்கும், வகையில் இது செயற்படும் என அமைச்சர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க