உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரயில்வே தொழிற்சங்கங்கள் மீது காவல்துறை விசாரணை ஆரம்பம்

ரயில்வே சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட நிலையில் ரயில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு தொடர்பில் காவல்துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

ரயில்வே பொது முகாமையாளர் டிலாந்த பெர்னாண்டோ அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமானதாக அறிவிக்கப்பட்ட ஒரு சேவையை நிறுத்தும் எந்தவொரு முயற்சியும் ஒரு குற்றமாக கருதப்படும். அதன்படி, ரயில்வே தொழிற்சங்கவாதிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு நள்ளிரவுடன் முடிவடைந்தது.

ரயில் துறையில் சம்பள முரண்பாடுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

கருத்து தெரிவிக்க