உள்நாட்டு செய்திகள்புதியவை

‘இலங்கை எதிர்மறை காரணங்களுடன் மீண்டும் தலைப்பு செய்தியாகியுள்ளது’

இலங்கை மீண்டுமொருமுறை எதிர்மறை காரணங்களுடன் தலைப்பு செய்தியில் வந்துள்ளதென ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோஹ்ட் தெரிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் தளத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் நிலை தொடர்பில் அவர் தமது ட்விட்டரில் பல்வேறுவிடயங்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

2018 இல் இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமென அறிவிக்கப்பட்ட நற்செய்தி தேவையற்ற அரசியலமைப்பு நெருக்கடியால் மூடிமறைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் முஸ்லீம் அமைப்புகளுக்கு எதிரான நிலையை தோற்றுவித்தது.

இந்நிலையில் மீண்டும் மரண தண்டனை நிறைவேறுவது தொடர்பில் பேசப்படுகின்றது.

இலங்கையை நல்லதொரு சுற்றுலா தலமாக மாற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது போன்ற விடயங்கள் சுற்றுலா பயணிகளின் வருகையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க