மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகளுக்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உட்பட 10 பேரை ஜூலை 19 ம் திகதி விசேட உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக விசேட உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சட்டமா அதிபர் முன்பதாக சிரேஷ்ட நீதிபதியிடம் அனுமதி கோரியிருந்தார்.
இந்நிலையில் இன்று சந்தேகநபர்கள் மீது சட்டமா அதிபர் சிறப்பு உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.
இவற்றில் சில சந்தேக நபர்கள் மீது பங்கு மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 56 ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் இரகசிய தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனத்திற்கு வழங்கியதாக ஏனையோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த சந்தேக நபர்களை விசேட உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க