ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ள நிலையில் ரயில்வே தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமைக்கு எதிராக ரயில்வே திணைக்களம் முறைப்பாடு செய்துள்ளது.
இன்று கோட்டை பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அவசரகால விதிமுறைகளை மீறியதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் படி, ஒரு அத்தியாவசிய சேவையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் குற்றமாக கருதப்படுகின்றது.
ரயில்வே சேவையினை அத்தியாவசிய சேவையாக அறிவித்து நேற்று வர்த்தமானி வெளியிடப்பட்ட நிலையில் ரயில்வே தொழிற்சங்கவாதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலையில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட 48 ரயில்களில் ஏழு ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க