2010ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக யோக்கர் பந்துகளை வீசியவர் என்ற சாதனையை இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க பதிவு செய்துள்ளார்.
மலிங்க ஏனைய பந்துவீச்சாளர்களால் இலகுவில் எட்டமுடியாத மிகப்பெரிய இலக்காக 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் மொத்தமாக 872 யோக்கர் பந்துகளை வீசியுள்ளார்.
இவருக்கு அடுத்தப்படியாக, நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி 328 யோக்கர் பந்துகளை வீசியுள்ளார். இவ்வாறு, முதல் இரண்டு இடங்களுக்கும் இடையில் 500 யோக்கர் பந்துகள் இடைவெளி காணப்படுகின்றன.
அத்துடன், குறித்த பட்டியலில் மூன்றாவது இடத்தை 327 யோக்கர் பந்துகளுடன் அவுஸ்ரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் பிடித்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கை வீரரான நுவான் குலசேகர நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார்.
நுவான் குலசேகர இறுதியாக 2017ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியொன்றில் விளையாடியிருந்தாலும், மொத்தமாக 288 யோக்கர் பந்துகளை வீசியுள்ளார்.
குறித்த பட்டியலின் 5வது இடத்தை நியூசிலாந்து அணியின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான ட்ரென்ட் போல்ட் 233 யோக்கர் பந்துகளை வீசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க