உள்நாட்டு செய்திகள்புதியவை

ஒப்பந்த அடிப்படையில் தென்கொரியா இலங்கைக்கு நிதி உதவி!

ஒப்பந்த அடிப்படையில் தென்கொரியா இலங்கை அரசுக்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமையை காலநிலை மாற்றம் மற்றும் வாழ்வாதாரங்களை பன்முகப்படுத்தல் மூலம் கட்டியெழுப்புவதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சிற்கும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இடையில் இது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதன்படி, 2019ஆம் மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்காக 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியமாக தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க