முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மீது அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றத்தில் நேற்று பத்து புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் வசித்து வரும் ரமேஷ் தேவராஜன், வித்யா ஜெயக்குமார், ராமணன் சிவலிங்கம், சாந்தி பத்மநாதன், சமன் பெரேரா, நிமல் ஜெயசூரிய, வசந்தி ரத்னசிங்கம், சுரேஷ் ஜெயபாலன், செந்தில் புவனேஸ்வரன், மயூரன் ராஜகுமார் ஆகியோர் இந்த புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இலங்கை மற்றும் கனேடிய குடியுரிமை பெற்ற ரோய் சமாதானம் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் கோதாபய ராஜபக்ஷ மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவர் மீதான குற்றசாட்டுக்கள் 11 ஆக காணப்படுகிறன.
வழக்கு தொடரப்பட்டவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 64 பக்க நீதிமன்ற ஆவணத்தில், கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்காரம், கடத்தல் சித்திரவதை,உள்ளிட்ட குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சைத்யா வீதியில் உள்ள தடுப்பு காவல், குற்றப்புலனாய்வு பிரிவு தலைமையகம்,பூசா முகாம், மவுண்ட் லெவன்யா, தெமட்டகொடை மற்றும் புல்மோட்டை பொலிஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் மேற்படி சுமத்தப்பட்ட குற்றங்கள் இடம்பெற்றதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் பாலியல் அடிமைத்தனம் நிகழ்ந்த இரண்டு இராணுவ முகாம்களையும் குறித்த முறைப்பாடு சுட்டிக்காட்டுகிறது. எனினும் அவை இடம்பெற்ற இடங்கள் ஆவணத்தில் குறிப்பிடப்பவில்லை.
கருத்து தெரிவிக்க