உள்நாட்டு செய்திகள்புதியவை

தென்னாபிரிக்க ஜனாதிபதி-பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா இன்று இலங்கைக்கு குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளார்.

உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளும் நிலையில் அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார்.

இந்நிலையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவை கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் குறுகிய நேரப் பேச்சுக்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க