முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமின் சகோதரர் பாயின் ஹலீமுக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் இலங்கை வங்கி, முதலீட்டு சபை அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் மேற்படி நிதி அமைப்பு சார்ந்தோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்க வாய்ப்பு வழங்குமாறு பொது பல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க