முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் எதிர்வரும் 28ஆம் திகதி 2.30 மணிக்கு வாக்குமூலங்கள் பெறப்படும் என நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் சாட்சியம் வழங்குவதற்காக அவர் சமூகமளித்திருந்த நிலையில், இவ்வாறு ஒத்திவைப்பதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு இன்று கூடியது.
இதன்போது, இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்கள் சாட்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க