நாட்டில் உள்ள மத்ரசா கல்வி நிறுவனங்கள் தொடர்பில் சட்டங்கள் இயற்றப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இழப்பீட்டிற்கான அலுவலகத்தின் ஊடாக 250 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து வன்முறைகள் இரத்தம் சிந்தும் வகையில் பரவாமைக்கு நாட்டில் காணப்பட்ட நல்லிணக்கமே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிலர் பிரிவினைவாதத்தால் நன்மை பெற்றாலும் பிரிவினைவாதிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை எனவும் அவர் கூறினார்.
கருத்து தெரிவிக்க