இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவரின் விசாரணை இன்றும் வவுனியா மேல்நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன் போது மூவருக்கும் எதிரான குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. இதனைய டுத்து இந்த மூவருக்கும் எதிராக சாட்சியம் அளிக்கும் வகையில் சாட்சி ஒருவர் அரச தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அந்த சாட்சியம் முடிந்த நிலையில் நேரம் போதாமையினால் இந்த வழக்கு விசாரணை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என வவுனியா மேல்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் தமது தடுப்பில் இருந்த 26 இராணுவத்தினரையும் கடற்படையினரையும் கொலை செய்தார்கள் என்று குற்றம் சுமத்தி இந்த அரசியல்கைதிகள் மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க