விளையாட்டு செய்திகள்

கோபா அமெரிக்கா கால்பந்து-ஆர்ஜன்டினா கால் இறுதிக்கு தகுதி

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஆர்ஜன்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் கட்டாரை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் 14 முறை சம்பியனான ஆர்ஜன்டினா அணி, ஆசிய சம்பியனான கட்டாரை எதிர்கொண்டது.

4-வது நிமிடத்தில் ஆர்ஜன்டினா அணி முதல் கோலையும் 82-வது நிமிடத்தில் மற்றுமொரு கோலையும் அடித்தது.

எதிர்த்து போராடிய கட்டார் அணியால் அணியால் இறுதி வரை ஒரு கோலையும் அடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் ஆர்ஜன்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

12 அணிகள் இடையிலான 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வருகிறது.

கருத்து தெரிவிக்க