நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படாததே தோல்விக்கு காரணம் என்று தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் பாப் டு பிளிஸ்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
உலக கிண்ண கிரிக்கட் தொடரில் லண்டனில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் 49 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வழக்கமாக எங்கள் பந்து வீச்சு நன்றாக இருக்கும். ஆனால் இந்த ஆட்டத்தில் பந்து வீச்சும் சரியாக அமையாததால் எதிரணியை 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தனர்.
நாங்கள் வேகமாக விக்கட்டுகளையும் பறிகொடுத்தோம். இது தான் எங்களுக்கு பிரச்சினையாக அமைந்தது. எங்களது துடுப்பாட்ட வீரர்கள் தன்னம்பிக்கை இழந்துள்ளனர்.
நாங்கள் கடுமையாக பயிற்சி எடுத்தோம். தீவிரமாக உழைத்தோம்.
ஆனால் விளையாட்டை பொறுத்தமட்டில் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் என அணித்தலைவர் தமது தோல்வி தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க