உள்நாட்டு செய்திகள்புதியவை

வெலிக்கடை சிறையில் உள்ள 150 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்!

வெலிக்கடை சிறையில் உள்ள கைதிகளில் 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மாற்றப்பட்டவர்களில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

வெலிக்கடை சிறையில், முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைகளுக்கு மாற்றப்பட்டவர்கள் திருத்தப்பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் வெலிக்கடை சிறைக்கு அழைத்து வரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக குறித்த இரண்டு சிறைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் மேலும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க