உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

உண்ணாவிரதம் மேற்கொண்ட அரசியல் கைதிகள் மூவர் மேல் நீதிமன்றத்தில்

இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன், ஆகிய இரண்டு அரசியல் கைதிகளும் 15 இராணுவத்தினரைக் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் கொலை செய்த குற்றச்சாட்டில் 2014ஆண்டு கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் 2017 ஆண்டு திருத்தப்பட்ட குற்றப்பத்திரத்தின் மூலம் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு இராசதுரை திருவருள் என்ற முன்னாள் போராளியும் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தார்.

இவர்கள் மூவரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு வவுனியா மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

நீண்டகாலம் அரசியல் கைதிகளாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளின் வழக்கு விசாரணைகள்  துரிதப்படுத்தப்பட்டு வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க