மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய 10வது பருவகால படுவான்சமர் எனும் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியும் பரிசு வழங்கும் நிகழ்வும் நேற்று கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்திலிருந்து 32 அணிகள் பங்குகொண்ட, விலகல் முறையில் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு, காஞ்சிரங்குடா ஜெகன் அணியினரும், பட்டிப்பளை வைரவர் அணியினரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இறுதிச் சுற்றில் இவ்விரு அணியினரும் மோதிக்கொண்டதில் 1 -0 என்ற கோல் அடிப்படையில் காஞ்சிரங்குடா ஜெகன் அணி வெற்றிபெற்று சம்பியனானது.
இந்த போட்டியில் , 3 ம் இடத்தினை கரையாக்கந்தீவு காந்தி விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.
முதல் மூன்று நிலைகளையும் பெற்ற அணிகளுக்கு பணப்பரிசில்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
ஈஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பி.நீதிதேவன் தலைமையில் நடைபெற்ற இறுதிநிகழ்வில், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக்குருக்கள்,நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து தெரிவிக்க