உள்நாட்டு செய்திகள்புதியவை

இரத்மலானை இந்து கல்லூரியின் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

இரத்மலானை கொழும்பு இந்துக்கல்லூரி பெற்றோரும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 7.30முதல் முற்பகல் 9.30 வரை நடத்தப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபருக்கு எதிராக வெளியார் சிலர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெற்றோர் “ஊடகனி”டம் தெரிவித்தனர்.

தற்போது பணியில் உள்ள அதிபர் இந்தப் பாடசாலையை பொறுப்பேற்றபோது 300 மாணவர்கள் கல்வி கற்றனர். தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்துள்ளது.

இதில் அதிகமானோர் மலையகப் பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களாவர்.

கல்விப்பொதுத்தராதர உயர்தர கற்கை நெறிகள் அனைத்துமே இந்த கற்பிக்கப்படுகின்றன.

அத்துடன் மேல் மாகாணத்தில் ஒரேயொரு தமிழ்மொழி விளையாட்டுப் பாடசாலையாகவும் இது தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாடசாலையின் அதிபர் கல்லூரி விடுதி செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில் ஆசிரியர் சங்கத்தின் ஊடாக மனு ஒன்று ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விசாரணைகள் எதுவுமின்றி அதிபரை, களுத்துறை வலயத்துக்கு கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்று பெற்றோர் கூறுகின்றனர்.

கருத்து தெரிவிக்க