ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
தமது கட்சியின் நிலைப்பாட்டை சுதந்திரக்கட்சியின் தலைவருக்கு நேரில் எடுத்துரைக்கும் நோக்கிலேயே குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளனம் ஆகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் தலைமைப் பதவி மஹிந்தவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், ஜனாதிபதி வேட்பாளர் பெயரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
மேற்படி சந்திப்பின்போது இது குறித்தும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய அரசியல் கூட்டணியை அமைப்பது சம்பந்தமாக சுதந்திரக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை முக்கியத்தும்மிக்கதாக கருதப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க