உள்நாட்டு செய்திகள்

இந்தியாவின் அவசரகால அம்பியுலன்ஸ் சேவை கிழக்கிலும் ஆரம்பம்

அவசரகால அம்பியுலன்ஸ் சேவை இன்று கிழக்கு மாகாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அமைச்சர்களான தயா கமகே, கலாநிதி. ஹர்ஷா டி சில்வா, அனோமா கமகே, இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் ஏனைய பிரமுகர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் அவசரகால அம்பியுலன்ஸ் சேவை நாடு முழுவதிலுமுள்ள ஒன்பது மாகாணங்களிலும் இப்பொழுது  கிடைக்கப் பெறுகிறது.

இந்த நிகழ்வில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சு. ஜெய்ஷங்கர் ஒரு விசேட காணொளிச் செய்தி வழங்கி இருந்தார்.

இதில்,ஆரம்பத்திலிருந்து தனிப்பட்ட விதத்தில் இச்செயல்திட்டத்தோடு தான் தொடர்புபட்டிருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.

வெள்ளம் மற்றும் அண்மைய பயங்கரவாதத் தாக்குதல்களின் போது இச்சேவை எவ்வாறு இலங்கைக்கு உதவியது என்பதையும் இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து எதனைச் சாதித்துக் கொள்ள முடியுமென்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இச்செயல்திட்டம் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை செயல்திட்டம் இந்தியாவின், பகிர்ந்து கொள்ளும் உணர்வை குறித்துக் காட்டுவதாக இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து தனதுரையில், குறிப்பிட்டார்.

இந்தியாவின் அவசரகால அம்பியுலன்ஸ் சேவையின் நாடு முழுவதிற்குமான விஸ்தரிப்பு 2018, ஜூலையில் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க