உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஆறுமுகன் தொண்டமானுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர் இன்றைய தினம் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளனர்.

வட மாகாண முன்னாள் முதலமைச்சருடனான குறித்த சந்திப்பு மரியாதை நிமித்தம் இடம்பெற்றதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

யாழ் சென்றிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், விக்னேஸ்வரனை சந்தித்துள்ளது.

கருத்து தெரிவிக்க