உள்நாட்டு செய்திகள்புதியவை

கடந்த அரசாங்கம் போலியான புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது – சஜித் குற்றசாட்டு

சமுர்த்தி கொடுப்பனவை பெற முடியாதிருப்பவர்களுக்கு எதிர்வரும் வாரங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வறுமை நிலை 6-7% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், சமுர்த்தி கொடுப்பனவு பெறும் வீதம் 29% ஆக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வறுமை அளவைக் குறைக்க கடந்த அரசாங்கம் போலியான புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தியுள்ளதென அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக கணிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக நாட்டுக்கு அதிக வட்டிக்கு கடன் பெற நேர்ந்துள்ளது.

கடந்த அரசாங்கம் சரியான புள்ளிவிவரங்களைக் காட்டியிருந்தால், துறைமுக நகரத் திட்டத்திற்கோ அல்லது மத்தள விமான நிலையத்துக்கோ நாங்கள் கடன் பெற்றிருக்க தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க