உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரசியலைப்பு திருத்தங்களே நாட்டின் குழப்பங்களுக்கு காரணம்- ஜனாதிபதி குற்றச்சாட்டு

அரசியலைப்பு திருத்தங்களே நாட்டில் குழப்பங்கள் ஏற்பட காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

18 ஆவது அரசியலமைப்பு என்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையூடாக நாட்டை சீரழித்ததென குறிப்பிட ஜனாதிபதி, 19 வது திருத்த சட்டத்தின் ஊடாக நாட்டில் தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

19 வது திருத்த சட்டத்தில் காணப்படும் அதிகார பகிர்வில் உள்ள சிக்கல்களே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு காரணமாக இருந்தது ஒரு தனி மனிதனின் செயற்பாடோ தனி மனிதன் தொடர்புடையதோ அல்ல. அது அரசியலைப்புடன்
சம்பந்தப்பட்டது.

எனவே 18 மற்றும் 19 வது அரசையலமைப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க