உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

அவப்பெயரை ஏற்படுத்தும் உறுப்பினர்- நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

அபிவிருத்தி பணிகள் மீது விமர்சனங்களை வெளியிடுவதால் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் கோப் குழுவுக்கு பல முறைபாடுகள் சென்றுள்ளது என அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண கொட்டகலை யதன்சைட் தமிழ் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதை தெரிவித்துள்ளார்.

இராஜாங்க கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இந்த நாட்டில் நூற்றுக்கு எழுபது வீத பாடசாலைகள் எனது தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் ஆசிரியர்கள் நியமனம், கல்வித்துறைசார் அதிகாரிகளின் நியமனம் என பல்வேறு வேலைத்திட்டங்களை நான் மேற்கொண்டுள்ளமையை எவராலும் மறுக்க முடியாது.

ஒரு காலத்தில் சிறிய இடம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் தின விழா போட்டிகளை தேசிய தமிழ் தின விழா போட்டியாக நாட்டு ஜனாதிபதிகளின் ஊடாக நான் முன்னெடுத்துள்ளேன் .

மக்கள் நலன் கருதியே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அதை கட்சியின் உறுப்பினர் ஒருவர் விமர்சினத்திற்கு உள்ளாக்கியதால் இன்று மலையகத்தின் மூத்த அரசியல் தொழிற்சங்கத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற கோப் குழுவில் பல்வேறு முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே விமர்சனம் செய்பவர்களை மூத்த கட்சியில் வைத்துக் கொள்வது தொடர்பில் அக்கட்சியின் தலைவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க