உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘வாழும் உரிமையை பறித்துவிட்டது அரசு’ – மகாநாயக்க தேரர்களிடம் மஹிந்த முறைப்பாடு

நல்லாட்சி எனக் கூறப்படும் அரசாங்கம் மக்களின் வாழும் உரிமையைகூட பறித்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கண்டிக்கு இன்று (23)  பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எந்தநேரத்தில் குண்டு வெடிக்குமோ என்ற அச்சம்  ஏற்பட்டுள்ளதால் ஆன்மீக நிகழ்வுகளுக்கு செல்வதற்குகூட மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். பொருளாதாரமும் ஆட்டம் கண்டுள்ளது.

சுருக்கமாக சொல்லப்போனால் மக்களின் வாழும் உரிமை அரசால் பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மகாநாயக்க தேரர்களுக்கும் தெளிவுபடுத்தினேன்.

எனவே, நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிக்கும் வேட்பாளர் ஒருவரையே நாம் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவோம். அவரே வெற்றி வேட்பாளராக இருப்பார்.” என்றும் மஹிந்த கூறினார்.

 

கருத்து தெரிவிக்க