விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – நியூசிலாந்து முதலிடம்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

நேற்று சனிக்கிழமை மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டு பெற்றுக்கொண்ட வெற்றியை அடுத்து முன்னேறியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான வெற்றியை அடுத்து இரண்டு புள்ளிகளைப் பெற்று 11 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் 10 புள்ளிகளை பெற்ற அவுஸ்ரேலிய அணியும் 9 புள்ளிகளை பெற்ற இந்திய அணி மூன்றாம் இடத்திலும் எட்டு புள்ளிகளை பெற்ற இங்கிலாந்து நான்காம் இடத்திலும் உள்ளன.

இதேவேளை, இலங்கை அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்ததன் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு புள்ளிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று ஆறாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கருத்து தெரிவிக்க