நாட்டின் பல்வெறு கடற்பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமையும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்று இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
அத்துடன், திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம், மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கடலை அண்டி வாழ்வோரும் கடற்றொழிலில் ஈடுபடுவோரும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க