ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன விரைவில் செயற்பாட்டு அரசியலில் குதிக்கவுள்ளார் என்றும், இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் சுதந்திரக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது மகளிர் அணியின் இணைச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.
பொதுத்தேர்தலில் அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொலன்னறுவை மாவட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கோட்டையாகும். எனவே, அங்கு வாரிசு அரசியலுக்கு வழிவகுக்கும் வகையிலேயே இவ்வாறு வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க