விளையாட்டு செய்திகள்

கோபா அமரிக்க கால்பந்து-காலிறுதிக்கு முன்னேறியது சிலி

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஈகுவடாரை வீழ்த்தி சிலி அணி கால் இறுதிக்கு முன்னேறியது.

நேற்று அதிகாலை சால்வடோரில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியனான சிலி அணி, ஈகுவடாரை (சி பிரிவு) எதிர்கொண்டது.

இந்த போட்டியில் அனுபவம் வாய்ந்த சிலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை தோற்கடித்தது.

ஏற்கனவே தனது பிரிவில் ஜப்பானை வீழ்த்தி இருந்த சிலி அணி 2-வது வெற்றியின் மூலம் கால் இறுதிக்கு முன்னேறியது.

46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடர் பிரேசிலின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதுகின்றன.

கருத்து தெரிவிக்க