வெளிநாட்டு செய்திகள்

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கும் அமெரிக்கா

ஈரான் மீது நாளை முதல் வேறு எந்த நாட்டிற்கும் விதிக்காத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஒருபோதும் அவர்களால் அணு ஆயுதத்தை தயாரிக்க முடியாது.

அமெரிக்காவின் ஆளில்லாத விமானத்தை தாக்கியதையடுத்து, ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டது.

தாக்குதல் நடத்தினால் 150 பேர் கொல்லப்படுவார்கள் என்று இராணுவத்தளபதி தம்மிடம் கூறியதால் முடிவை மாற்றிக் கொண்டேன்.

எனினும். ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நியுயோர்க்கில் ஏராளமான ஈரானியர்கள் வசிக்கிறார்கள். தமக்கு ஏராளமான ஈரானிய நண்பர்கள் இருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க