விஜய்யின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இதையொட்டி தமிழகம் முழுவதும் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்பிருந்தே விஜய் நடவடிக்கைகளில் அரசியல் இருப்பதாக கருதப்பட்டது.
2008-ல் ரசிகர் மன்றத்தை திடீரென்று விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதற்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார்.
இளைஞர் அணி, மாணவர் அணி என்று அரசியல் கட்சிக்கு இணையாக அமைப்புகளை உருவாக்கினார். மாநில-மாவட்ட பொறுப்புகளில் இருந்து நகர ஒன்றிய பூத் கமிட்டி வரை நிர்வாகிகளை நியமனம் செய்து அரசியல் கட்சிக்கு இணையாக அமைப்பை வலுப்படுத்தி வைத்துள்ளார்.
விஜயின் மக்கள் இயக்கம் எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சியாக மாறலாம் என கூறப்படுகிறது. இந்நிலையிலேயே ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க