கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவ பரிசோதனையின் பின் நீராகாரத்துடன் போராட்டத்தை தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தாம் இப்போராட்டத்தை கைவிடவில்லை எனவும், தமது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும் வரையில் நீராகாரம் மாத்திரம் அருந்தி போராட்டத்தை தொடர்வோம் எனவும் உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பலத்து பாதுகாப்புக்க மத்தியில் கல்முனைக்கு வந்த கலகொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட குழுவினர் வெளியேறியுள்ள்ளனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் (3 ம் பதிப்பு)
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடல் நிலை மோசமாகியுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் சிலரின் உடல் நிலை மோசமாகியுள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கல்முனையில் சுழற்சி முறையிலான போராட்டம் ஆரம்பம் (2 ஆம் பதிப்பு)
ஞான சார தேரரின் வாக்குறுதிக்கமைய கல்முனை உண்ணாவிரத போராட்டம் சுழற்சி முறையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விரைவில் தீர்வுபெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் தானும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என தேரர் வாக்குறுதியளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சுழற்சி முறையில் உண்ணாவிரத போராத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை போராட்ட களத்திற்கு ஞான சார தேரர் திடீர் விஜயம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி நடத்தப்படும் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஞான சார தேரர் நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் உரையாடியுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று போராட்டக்காரர்களை சந்திக்க சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தூதுக்குழுவை அந்த மக்கள் வெளியேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க