அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 6ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
அதற்கமைய திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனனாயகக் கட்சியினரால் திருகோணாமலை மத்திய பேரூந்து தரிப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் அவர்களது அகிம்சைப்போராட்டம் வெற்றிபெறவேண்டும் என வலியுறுத்தியும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது
கருத்து தெரிவிக்க