சினிமா

விஜய்யின் 63வது படப்பெயர் “பிகில்”-இரண்டு வேடங்களில் விஜய்!

தெறி, மெர்சல் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் அட்லீ, விஜய் கூட்டணி சேர்ந்துள்ளனர். விஜய்யின் 63 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், இன்று விஜய்யின் பிறந்த நாள் என்பதால் இப்படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் முதல்கண்ணோட்டத்தை நேற்று மாலையும் இரண்டாவது போஸ்டரை இன்றும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் இரண்டு விஜய் உள்ளதால் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பார்; அதாவது அப்பா மகன் வேடத்தில் நடிப்பார் எனவும் தெரிகிறது. இப்படத்திற்கு “பிகில்” என பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க அவர்களுடன் கதிர், ஜாக்கி ஷெராப், யோகிபாபு, இந்துஜா, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள். கால்பந்தாட்டம் தொடர்பான கதையில் உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க