உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கல்முனை உண்ணாவிரதத்திற்கு பின்னால் அரசியல் சக்திகள் செயற்படுகின்றன: நாடாளுமன்றத்தில் ரவூப்

அம்பாறை – கல்முனையில் முன்னெடுத்து வருகின்ற உண்ணாவிரதப் போராட்டங்களுக்குப் பின்னால் அரசியல் சக்திகள் செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின்னர் உள்நாட்டு தீவிரவாத அமைப்புக்கள் சிலவற்றின் மீது தடைவிதிக்கப்படும் வரை அப்படியான அமைப்புக்கள் இயங்கியதா என்று தெரிந்துகொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம் – கல்முனை தெற்கு உப பிரதேச செயலகத்தை அதிகாரமுடைய செயலகமாக தரமுயர்த்துமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.
தெற்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ள போதிலும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு அமைச்சர்களான மனோ கணேசன், தயா கமகே மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்டவர்களும் அங்கு இன்றையதினம் விஜயம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் அவசர காலச் சட்டத்தை நீக்குதல் மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் உட்பட 03 அடிப்படைவாத அமைப்புக்கள் மீதான தடையை நீடித்தல் தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குப் பின்னர் சுமூக நிலைக்குத் திரும்புகின்ற நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க