தெரிவுசெய்யப்பட்ட 8 மாவட்டங்களில் போசாக்கு குறைவான மக்களுக்குரிய போஷாக்கை அதிகரிக்க ஜனாதிபதி செயலகம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதன்படி அனுராதபுரம், மன்னார், இரத்தினபுரி நுவரெலியா,அம்மாந்தோட்டை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்த விசேட திட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி செயலகம் முன்வந்துள்ளது.
இந்நிலையில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான மட்டக்களப்பில் இந்த விசேடதிட்டத்தினை அமுல்படுத்துவதற்கான விசேட செயலமர்வு இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்.சசிகலா புண்ணியமூர்த்தி, வேல்ட்விசன் சர்வதேச தொண்டார்வ நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ஜே.ஏ.ரமேஸ்குமார். மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிபிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது உணவு மற்றும் வாழ்க்கை முறையே சில தொற்றாநோய்களுக்கு காரணியாக அமைவதாகவும் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்களிடத்தில் போசாக்கு குறைபாடு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதை தடுப்பதற்கு எதிர்காலத்தில் அமுல்படுத்த வேண்டிய திட்டங்களும் வகுக்கப்பட்டன.
கருத்து தெரிவிக்க