உள்நாட்டு செய்திகள்புதியவை

முஸ்லிம்களுக்கான புதிய அரசியல் தலைமை – மஹிந்த அழைப்பு

முஸ்லிம்களுக்கான புதிய அரசியல் தலைமை ஒன்றை உருவாக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய முஸ்லிம் தலைமைத்துவம் ஒன்றை உருவாக்குவதற்கு தமது கட்சி முழுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதில் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் இணைந்துக் கொள்ள முடியும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க